Loading Now

தென் கொரியா: சுறாவை மீட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் கால்வாய்க்கு திரும்பிய வினோதம்!

தென் கொரியாவின் புசான் நகரில் உள்ள செயற்கை கால்வாயில் சிக்கியிருந்த ராட்சத சுறா மீன், பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டு கடலுக்குள் விடப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் அதே கால்வாய்க்குள் திரும்பிய வினோத சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.கால்வாயில் புகுந்த ராட்சத சுறாதென் கொரியாவின் முக்கியத் துறைமுக நகரமான புசானில் ‘வடக்கு துறைமுக வாட்டர்பிரண்ட் பார்க்’ கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயில் 3 மீட்டர் நீளமுள்ள பெண் ‘டஸ்கி சுறா’ ஒன்று ஒரு மாதத்திற்கும் மேலாக சுற்றித் திரிந்துள்ளது. இதனால் அந்த சுறாவிற்கு உள்ளூர் மக்கள் ‘புகாங்கி’ என பெயரிட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி அன்று இந்த பெண் புகாங்கி சுறா தவறுதலாக கால்வாயில் நுழைந்து சிக்கிக்கொண்டது.சவாலான மீட்புப் பணிஇதனைத் தொடர்ந்து, கடல்சார் நிபுணர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து கடந்த புதன்கிழமை ஒரு பெரிய மீட்புப் பணியைத் தொடங்கினர். சிறப்பு வலைகள் மற்றும் மிதக்கும் தளங்களைப் பயன்படுத்தி, பல மணி நேரம் போராடி சுறாவை பத்திரமாக திறந்த கடலுக்குள் திருப்பி அனுப்பினர். அது மீண்டும் வராமல் தடுக்க கால்வாயின் நுழைவாயிலில் தற்காலிக வலைத் தடைகளும் அமைக்கப்பட்டன.தடையை மீறித் திரும்பிய வினோதம்ஆனால், அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, அடுத்த நாள் காலை (வியாழக்கிழமை) அந்த சுறா அமைக்கப்பட்டிருந்த வலைத் தடைகளையும் மீறி, மீண்டும் அதே கால்வாய்க்குள் நீந்தி வந்து சேர்ந்தது.அதிகாரிகளின் கவலை -அடுத்தகட்ட நடவடிக்கைஅந்த கால்வாயிலேயே சுறா தொடர்ந்து நீந்தி வருகிறது. அதன் மூக்கு மற்றும் துடுப்புப் பகுதிகளில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாலும், கொரியாவில் குளிர்காலம் நெருங்குவதாலும் அதன் உடல்நிலை மோசமடையக்கூடும் என்று கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சுறாவை அதன் இயல்பான ஆழ்கடல் பகுதிக்கு கொண்டு சேர்க்க அதிகாரிகள் அடுத்தகட்ட திட்டங்களை ஆலோசித்து வருகின்றனர்.

Share this content:

Post Comment

You May Have Missed