Loading Now

குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை விதிக்க உணவு பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை

குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ், பிரக்டோஸ் சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பரிந்துரைத்துள்ளது.6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் இந்த சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதைத் தடை செய்யும் வகையில் புதிய வரைவு விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் கருத்து தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.வரைவு விதிகள்குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடல் பருமன் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துகள் பெறப்பட்ட பின்னர், வரைவு விதிகள் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Share this content:

Post Comment

You May Have Missed