குன்றத்தூர் முருகன் கோவிலில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆறு திருமண மண்டபங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்

குன்றத்தூர்: பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமண மண்டப வசதியை அதிகரிக்கும் நோக்கில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் ஆறு புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டன. முகூர்த்த நாட்களில் அதிக திருமணங்கள் நடைபெறும் இந்த கோவிலில், போதிய இட வசதியின்மையால் திருமண ஏற்பாடுகளில் சிரமம் ஏற்பட்டதால், கோவில் பின்புறம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் மண்டபங்களின் கட்டுமானப் பணி தொடங்கியது. இந்த திருமண மண்டபங்கள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அவற்றை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்தார். நிகழ்வில் கோவில் நிர்வாகத்தினர், அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Share this content:

Previous post

கோவை மாநகராட்சியின் 35வது வட்டம்: புதிய மழைநீர் வடிகால் பணியை ஆய்வு செய்த மாமன்ற உறுப்பினர் சம்பத்

Next post

திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் மகாலிங்கம் தேவரின் பிறந்தநாள் விழா எஸ். கர்ணன் தேவர் தலைமையில் கொண்டாடப்பட்டது

Post Comment

You May Have Missed