குடியிருப்பு பகுதியில் சட்ட விரோத பார் உடன் இயங்கும் டாஸ்மாக் கடையால் பொது மக்கள் அவதி பலமுறை கடையை அகற்ற மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மிகப்பெரிய போராட்டம் கையில் எடுப்பதாக கிராம மக்கள் எச்சரிக்கை..
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தணஞ்சேரி சுபஷ்ஸ்ரீ நகரில் குடியிருப்பு கட்டிடத்தில் (4096)கடை எண் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடை இயங்கி வருகிறது இந்த டாஸ்மாக் கடைக்கு முறையான பார் அனுமதி பெறாத நிலையில் சட்டவிரோதமாக தகராத்தால் அமைக்கப்பட்ட பங்க் கடை வைத்து அதில் பார்ராக செயயல்பட்டு வருகிறது இந்த டாஸ்மாக் கடையால் அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் பாலிஸ்டிக் டம்லர் ,ஆங்காங்கே உடைந்த பாட்டில்கள், பெண்கள் நடந்தது செல்லும் போது போதை ஆசாமிகள் சாலையில் சிறு நீர் கழிப்பது போன்ற அறுவருக்க தக்க செயல்கள் நடைபெற்று வருகிறது மேலும் அப்பகுதியை கடந்து செல்லும் மாணவர்கள், பெண்கள் என பொது மக்கள் பலரும் மிகுந்த சிறமத்திற்கு ஆளாகின்றனர் இது குறித்து டாஸ்மாக் மேலாளர், மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை சமீபத்திய தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் 717 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்தார் அதனை டாஸ்மாக் அதிகாரிகள் தங்களுக்கு அதிக லாபம் தரும் இது போன்ற பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடைகளை விட்டுவிட்டு தங்களுக்கு லஞ்சம் வழங்காத கடைகளை மூடி சீல் வைத்தனர் இதனை தமிழக முதல்வர் நேரடி கவனத்தில் கொண்டு பொது மக்கள் இடையூறு ஏற்படுத்தும் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பார் அமைத்து செயல்படும் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கூறுகின்றனர் இதனை மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் இல்லை என்றால் கிராம மக்கள் ஒன்றிணைந்து மிக பெரிய போராட்டத்தை கையில் எடுப்பதாக கூறுகின்றனர்…



Post Comment