கனமழை முன்னேற்பாடுகள்.. உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.23) நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேற்பாடு மற்றும் சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, தேங்கிய மழை நீரை விரைவில் அகற்ற பாதிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Post Comment