கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தொடக்கநிலை மாணவர்களுக்கு பாராட்டு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கையிலே கலைவண்ணம் என்ற தலைப்பில் ஓவியம் வரைந்ததற்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வு கோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமத்துல்லா தொடக்கநிலை மாணவர்களை பாராட்டி பேசினார். ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கையிலே கலைவண்ணம் என்ற தலைப்பில் பல வகையான ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தினார். ஒவ்வொரு குழந்தைகளும் ,ஒவ்வொருகை வண்ணத்தில் ஓவியங்கள் வரைந்திருந்தனர். குறிப்பாக நட்சத்திரம், தலைவர்கள், இயற்கை கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி ஓவியங்கள் வரைந்திருந்தனர். ஓவியம் வரைந்த தொடக்கநிலை மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் மாதம் தோறும் வெளிவரும் துளிர் மாத இதழ் வழங்கி பாராட்டப்பட்டது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஒன்றாம் வகுப்பு ஆசிரியை செல்விஜாய் செய்திருந்தனர்.



Post Comment