41 பேர் மரணம்.. நீதிமன்றத்தில் FIR-ஐ சமர்ப்பித்த CBI
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ குழு சமர்ப்பித்தது. ஏஎஸ்பி முகேஷ் குமார் தலைமையில் ஆய்வாளர் மனோகர் கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நேற்று (அக்.22) மாலை வழங்கினார். இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், படுகாயம் அடைந்தவர்களை பயணியர் விடுதிக்கு நேரில் வரவழைத்து சிபிஐ குழுவினர் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Post Comment