Loading Now

முள்ளி பள்ளத்தில் சேவா சங்கல்ப் அபியான் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் முள்ளிப்பள்ளத்தில் பாரதபிரதமர் நரேந்திர மோடி யின் 76வது பிறந்தநாள்,25 ஆண்டுகால பொதுவாழ்வு மக்கள் சேவை சாதனையை போற்றும் வகையில் முள்ளிப்பள்ளம் பாரதிய ஜனதா சக்தி கேந்திரம் சார்பில் சேவா சங்கல்ப் அபியான் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி நாடு முழுவதும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சிக்கு சக்தி கேந்திர பொறுப்பாளர் தங்கதுரை விவேக் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம், இனிப்புகள், பிரசாதம் வழங்கப்பட்டன. மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, இளைஞரணித் தலைவர் முத்துமுனியாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். நிர்வாகிகள் விஜிபாண்டி, மகாலிங்கம், நாட்டரசன், ராமலிங்கம், கோடீஸ்வரி, ராம்பிரசாசதீஷ்ஜெனகை மணி சதீஷ், ரமேஷ், அர்ச்சகர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் வீர மணிகண்டன், முத்துப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

Share this content:

Post Comment

You May Have Missed