Loading Now

முருங்கை தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள ராட்சத மலைப்பாம்பு மீட்பு

முருங்கை தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மலையடிவாரப்பகுதி முருங்கை தோட்டத்தில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பை நவீன உபகரணங்களை பயன்படுத்தி பிடித்தனர். பிடிப்பட்ட பாம்பு 25 கிலோ எடையும் 12 அடி நீளமும் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர், பிடிப்பட்ட ராட்சத மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்தனர். ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Share this content:

Post Comment

You May Have Missed