Loading Now

மார்டின் குழுமம் உதவியுடன் 1 லட்சம் பனை விதை நடும் நெடும் பணி இன்று தொடக்கம்

image-6-1024x768 மார்டின் குழுமம் உதவியுடன் 1 லட்சம் பனை விதை நடும் நெடும் பணி இன்று தொடக்கம்

உலகத் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியல் கலந்த சுற்றுச் சூழலின் “கற்பக விருச்சம்” பனை மரம் மீட்பு பயணத்தில்
மார்டின் குழுமம் மற்றும் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி இணைந்து புதுவை மற்றும் தமிழகப் பகுதிகளில் 1 லட்சம் பனை விதை நடும் நெடும் பணி இன்று (06-11-2026) உழந்தைகீரப்பாளையம் NR சதுக்கம் வேல்ராம்பட்டு ஏரியில் இன்று தொடங்கப்பட்டது. பூரணாங்குப்பம் “பனை” ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார் மார்டின் குழுமம் நிர்வாகிகள் முன்னிலையில் முன்னால் உழவர்கரை நகராட்சி ஆணையர், செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குனர் திரு. சுரேஷ்ராஜ் அவர்கள் பனை விதை நடவை தொடங்கி வைத்தார். இதில் மார்டின் குழுமம் நிர்வாகிகள், தன சுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி தன்னார்வளர்கள் மற்றும் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பனை விதை நடவு செய்தனர். இன்று மட்டும் ஏரிக்ரை ஓரம் சுமார் 4,000 – பனை விதை நடவு செய்யப்பட்டது.
புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழகப் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள், கடற்கரை ஓரங்கள், ஆற்று ஒரங்கள், பொது திடல்கள் என அனைத்து பகுதிகளிலும் பனை விதை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Share this content:

Previous post

கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்!

Next post

லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிப்பதற்குப் பதிலாக, அரசு விசாரணைக் குழு அமைத்து உண்மை நிலையை வெளியிட வேண்டும் – திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் பேட்டி

Post Comment