மறைந்த முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் 76வது பிறந்தநாள் விழா
கும்மிடிப்பூண்டியாரின் 76வது பிறந்தநாள் விழா
மறைந்த கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், திமுக சார்பில் பெருமைக்குரிய அண்ணா விருதை பெற்றவருமான கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் 76வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது .
கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வேணு ஆனந்த் தலைமையில் , கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக அலுவகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் பகலவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி திமுக கவுன்சிலர் கருணாகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, ஒன்றிய திமுக நிர்வாகி வெங்கடேசன், லோகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஒன்றிய செயலாளர் கி.வேணு ஆனந்த் மறைந்த முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் திருவிருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் திமுகவினர் கி.வேணுவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஒன்றிய செயலாளர் கி.வேணு ஆனந்த் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்வில் திமுக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.



Post Comment