

பணி ஓய்வுபெற்ற சத்துணவு/அங்கன்வாடி ஊழியர்கள் – சென்னையில் முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 10:
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (10.09.2025) சென்னை தலைநகரில் மாநிலத் தலைவர் கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
மாநில துணைத் தலைவர் பி. சித்திரைசெல்வி வரவேற்புரை ஆற்றினார். அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் என்.எல். ஸ்ரீதரன் துவக்க உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் பி. ராமமூர்த்தி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
வாழ்த்துரையில் அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம். பாஸ்கரன், CITU மாநில துணை பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ. ஜெசி, வருவாய்துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் கே. குமரன், தலைமைச் செயலக சங்கத் தலைவர் ஜி. வெங்கடேசன், தமிழ்நாடு சமூகநலத்துறை பணியாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் கே. சக்தி வினோத்குமார், தென் சென்னை அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் த. முத்துக்குமாராசாமிவேல், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் ஏ. வெற்றிராஜன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் எஸ். ரத்தினமாலா, மாநகராட்சி–நகராட்சி–பேரூராட்சி ஓய்வுபெற்ற ஊழியர் சங்க மாநில பொருளாளர் ஜெ. பட்டாபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் மு. அன்பரசு சிறப்புரை ஆற்றினார். அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொது செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி நிறைவுரை ஆற்றினார். மாநில பொருளாளர் சி. ராமநாதன் நன்றி கூறினார்.
மாநில துணைத்தலைவர்கள் கே. ஆண்டாள், கே. சக்தி, ஜி. தாண்டவமூர்த்தி, எஸ். ராமசுப்புராஜ், பி. அய்யங்காளை, கிரேஸ் சகிகலா உள்ளிட்டோர், மாநில செயலாளர்கள் பி. சுந்தரம்மாள், எஸ். சூரியமூர்த்தி, கே.எம். ராஜேந்திரன், வி. சுப்பிரமணி, பி. பாண்டி, கே. சேஷம்மா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் சமூகநல ஆணையர், அரசு முதன்மைச் செயலாளர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மேலும், மாண்புமிகு முதல்வருக்கு கோரிக்கை மனு மெயில் மூலமாகவும் அனுப்பப்பட்டது.

கோரிக்கைகள்:
சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:
40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்குதல்.
விலைவாசி உயர்வை ஈடு செய்ய அகவிலைப்படி வழங்குதல்.
குடும்ப ஓய்வூதியம் வழங்குதல்.
பண்டிகை முன்பணம் ரூ.6,000 வழங்குதல்.
மாதாந்திர மருத்துவ படி ரூ.300 வழங்குதல்.
மருத்துவ காப்பீடு மற்றும் குடும்ப நல நிதி வழங்குதல்.
பொங்கல் போனஸ் ரூ.1,000 உயர்த்துதல்.
2021 தேர்தல் வாக்குறுதி படி காலமுறை ஊதியம்/ஓய்வூதியம் வழங்குதல்.
ஓய்வு பெறும் நாளிலேயே SPF, GPF தொகைகளை வழங்குதல்.
மாவட்டங்களிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை திருப்பி வழங்குதல்.
விடுபட்ட (Missing Credit) GPF தொகைகளை சரிசெய்து வழங்குதல்.
சங்கம் சார்பில் இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Post Comment