தீபாவளி ஏல மோசடி – 1,500 பேரிடம் இரண்டு கோடிக்கு மேல் வசூல்; பாதிக்கப்பட்டோர் மனு

சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏல சீட்டு நடத்துவதாகக் கூறி சுமார் 1,500 பேரிடம் இரண்டு கோடிக்கு மேல் பணத்தை வசூல் செய்த மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் பெற்ற பிறகு, ஒப்பந்தம் செய்த நபரை காண முடியாமல் தவித்த பொதுமக்கள் இன்று சென்னை காவல் கமிஷனரிடம் நேரில் சென்று எழுத்து மனு அளித்தனர்.

புகாரளித்தவர்கள் கூறியதாவது:
தீபாவளி பரிசுகள் வழங்கும் வகையில் ஏல சீட்டு வைக்கப்படுவதாக நம்பிக்கை ஏற்படுத்தி பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் பணம் திரட்டினர். ஆரம்பத்தில் சிலருக்கு சிறிய அளவில் பரிசுகள் வழங்கி நம்பிக்கை பெற்றதும், பின்னர் பெரும்பாலானோர் கொடுத்த பணத்தை திருப்பி வழங்காமல் ஏல ஏற்பாட்டாளர்கள் தடம் மாய்ந்துவிட்டனர்.
இச்சம்பவத்தில் சிக்கிய 1,500-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து, தாங்கள் செலுத்திய பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி காவல் கமிஷனரிடம் மனு சமர்ப்பித்தனர்.
மனு அளித்ததை உறுதிப்படுத்தும் அக்னாலெஜ்மென்ட் காவல்துறையினரால் வழங்கப்பட்டதுடன், ஏழு நாட்களுக்குள் தேவையான தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
Post Comment