Loading Now

‘களரி’ என் வாழ்க்கை முறையாக மாறி​விட்​டது: ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி

நடிகை ஸ்ரேயா ரெட்டி, பிர​சாந்த் வர்மா சினி​மாடிக் யுனிவர்ஸின் பிரம்​மாண்​டப் படமான ‘மகாகாளி’ படத்​தில் நடித்து வரு​கிறார். பூஜா கொல்​லூரு இயக்​கும் இப்​படம் ஜன.8-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது. இந்​தப் படத்​துக்​காகப் பழங்​கால தற்காப்புக் கலை​யான களரிப்​பயட்டு பயிற்​சி​யைக் கடந்த 2 ஆண்​டு​களுக்​கும் மேலாக ஸ்ரேயா ரெட்டி மேற்கொண்டு வருவதாகக் கூறி​யுள்​ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு பயிற்​சி​யைத் தொடங்​கிய அவர், வாரத்துக்கு சுமார் 12 முதல் 15 மணி நேரம் வரை பயிற்​சி​யில் ஈடுபட்​டுள்​ளார். தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் களரிப் பயிற்சி​யின் வீடியோவை பகிர்ந்​துள்ள ஸ்ரேயா ரெட்​டி, களரி தனது வாழ்க்​கை​யில் ஏற்​படுத்​திய மாற்​றம் குறித்​துக் கூறியுள்ளார்.

அதில், “ஒரு​காலத்​தில் எனது உடலுட​னும் மனதுட​னும் நடந்த போராட்ட மாகக் களரி தோன்​றியது. படிப்​படி​யாக மிகப்​பெரிய பலமாக மாறி விட்​டது. ஒவ்​வொரு வீழ்ச்​சி​யிலும், ஒவ்​வொரு சவாலிலும் ஒவ்​வொரு பாடத்​தி​லும் களரி என்னை நிலைநிறுத்​திக் கொள்​ளக் கற்​றுக்​கொடுத்​தது. என் மனமும் உடலும் வலிமை​யாகி இருக்​கிறது.

களரிப்பயட்டு எனக்கு வெறும் உடற்​ப​யிற்சி மட்​டுமல்ல; அது என் வாழ்க்கை முறை​யாகவே மாறி​விட்​டது. இந்த தற்​காப்​புக் கலையைக் கற்​றுக்​கொண்​டது என் வாழ்க்​கை​யின் பெரிய ஆசீர்​வாதங்​களில் ஒன்​று. நான் எடுத்த மிகச் சிறந்த முடி​வும் இது​தான்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Share this content:

You May Have Missed