அடிதடி வழக்கில் தவெக எம்எல்ஏ செல்வம் விடுதலை
விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்த வேல்முருகனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் மனைவியின் சகோதரர் திவாகர், நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக 2016-ல் வேல்முருகன் புகார் அளித்தார். விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்த வேல்முருகனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் மனைவியின் சகோதரர் திவாகர், நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக 2016-ல் வேல்முருகன் புகார் அளித்தார்.
அதன்பேரில், விருதுநகர் கிழக்கு போலீஸார் திவாகர், செல்வம், பால மகேந்திரன், பால கர்ணன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்தனர். இந்நிலையிலில் செல்வம் விருதுநகர் எம்எல்ஏ ஆனார்.
இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் பிரதிநிதிகள் மீதான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபாஷினி, எம்எல்ஏ செல்வம் உள்பட 4 பேரையும் விடுவித்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.