Loading Now
’எனக்கு இறப்பு சான்று வேண்டும்..’ கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு

’எனக்கு இறப்பு சான்று வேண்டும்..’ கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு

வேலுார், செப். 23
வேலுார் கூட்டத்தில், மாவட்டம், கே.ஜி., ஏரியூரைச் சேர்ந்த காந்தி, 47, என்பவர், ‘உயிருடன் இருக்கும் தனக்கு, இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்’ என, புகார் மனு அளித்தார். அதன்பின், அவர் கூறியதாவது:
நான் விவசாயக் கூலி. கடந்த, 2025 பிப்ரவரியில், என் தந்தை ஆனந்தன் இறந்தார். அவரது பெயருடன் சேர்த்து, ரேஷன் அட்டையில், என் பெயரையும் அதிகாரிகள் நீக்கிவிட்டனர். எனக்கு ரேஷன் பொருட்கள் வருவதில்லை. கடந்த, 18 மாதங்களாக என் பெயரை, ரேஷன் அட்டையில் சேர்க்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். தற்போது என் மகன்கள் பூவரசன், பேரரசன் இருவரும், இந்திய ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆவணங்களை ஒப்படைக்கும்போது, ரேஷன் அட்டையில், தந்தை பெயர் இல்லாததால், என் மகன்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, ரேஷன் அட்டையில், என் பெயரை சேருங்கள், இல்லையென்றால், உயிருடன் உள்ள எனக்கு, இறப்பு சான்றிதழ் வழங்குங்கள்.”
இவ்வாறு அவர் கூறினார்.

Share this content:

You May Have Missed