Loading Now

விழுப்புரம் வீட்டின் அருகே விளையாடிய சிறுமி கடத்த முயற்சி – வடமாநில நபர் கைது

வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடத்தி செல்ல முயன்ற வடமாநில நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் அய்யூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் ரூபேஷ் – கவிதா தம்பதி. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஸ்ரீ தர்சினி என்ற மகள் உள்ளார். இவர் நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், திடீரென அச்சிறுமியின் வாயைப் பொத்தி கடத்த முயன்றுள்ளார்.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் கையில் தடியை எடுத்துக்கொண்டு கூச்சலிட்டு அந்த நபரை நோக்கி துரத்திச் சென்றார். தாயின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். தப்பியோட முயன்ற வடமாநில இளைஞரை வளைத்துப் பிடித்த பொதுமக்கள், அவருக்குத் தர்மஅடி கொடுத்தனர்.இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வடமாநில நபரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட வடமாநில இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இது குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this content:

Post Comment

You May Have Missed