Loading Now

ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடைபெற்ற பொம்மலாட்டம்: திரளான பொதுமக்கள் கண்டு ரசிப்பு

ராமநாதபுரம் சேதுபதி அரண்மணையில் பொம்மலாட்டம் நிகழ்ச்சி பெரும் விமர்சையாக நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரதித்தனர்.பொம்மலாட்டம் நிகழ்ச்சிராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை திருவிழா கலைநிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, வரலாற்று சிறப்புமிக்க ராமலிங்க விலாசம் மண்டபத்தில் பாரம்பரிய பொம்மலாட்ட நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.சமூக விழிப்புணர்வு செய்திகள்கடந்த 1900-ஆண்டுகளின் தொடக்கத்தில் அன்றைய சேதுபதி மன்னரால் கும்பகோணத்தில் இருந்து கலைக்குழுவினர் வரவழைக்கப்பட்டு இந்த பொம்மலாட்டம் மரபு தொடங்கி வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பல தலைமுறைகளாக தொடர்ந்து அரண்மனை விழாவில் இக்கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த முறை நடைபெற்ற நிகழ்ச்சியில் மரபுவழிக் கதைகளுடன், சமூக விழிப்புணர்வு செய்திகளும் நாடக வடிவில் பொம்மலாட்டம் மூலம் சுவாரசியமாக எடுத்துரைக்கப்பட்டன.சிறியவர்கள் -பெரியவர்கள்இன்றைய அலைபேசி மற்றும் நவீனத் தொழில்நுட்பக் காலத்திலும், இந்த அரிய பாரம்பரிய கலையைக் காண்பதற்கு சிறுவர்கள், பெரியவர்கள் என திரளான பார்வையாளர்கள் அரண்மனை மைதானத்தில் திரண்டு நிகழ்ச்சியை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.அரசுக்கு பார்வையாளர்கள் கோரிக்கைநிகழ்ச்சியைக் கண்டு ரசித்த சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும், “அழிந்து வரும் கலைகளில் ஒன்றான இந்த பாரம்பரிய பொம்மலாட்டக் கலையையும், இதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ள கலைஞர்களையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களிடையே இக்கலையைக் கொண்டு சேர்ப்பதுடன், கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி மற்றும் கலைமாமணி போன்ற அரசு அங்கீகாரங்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this content:

Post Comment

You May Have Missed