Loading Now
பேட்மிண்டன் விளையாடிய போது சோகம்… சென்னை காவல் உதவி ஆணையரின் மகன் மாரடைப்பால் உயிரிழப்பு

பேட்மிண்டன் விளையாடிய போது சோகம்… சென்னை காவல் உதவி ஆணையரின் மகன் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை செப். 24
சென்னையை அடுத்த போரூர் பகுதியில் தந்தை கண்முன்னே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறையில் உதவி ஆணையராக பணியாற்றி வருபவர் கவுதமன். இவரின் மகன் சிவ சூர்யா (வயது 23). இவர்கள் 2 பேரும் இன்று (புதன்கிழமை) போரூரில் உள்ள ஒரு தனியார் உட்புற பேட்மிண்டன் மைதானத்தில் வழக்கம்போல விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சிவ சூர்யா திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதனால் பதறிப்போன தந்தை மற்றும் அங்கிருந்தவர்கள், சிவ சூர்யாவை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிவ சூர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் வழியிலேயே தீவிர மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை கவுதமன் மகனைக் கட்டி அணைத்து கண்ணீர் விட்டு அழுதார். கண் இமைக்கும் நேரத்தில் தந்தை கண்முன்னே மகன் துடிதுடித்து உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Share this content:

You May Have Missed