Loading Now
https://dhinakani.com/wp-content/uploads/2026/09/Untitled-1-copy-20.jpg

பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களுக்கு இனி ’எமிஸ்’ வழியே இடமாறுதல்

சென்னை, செப். 22
பள்ளிக்கல்வித்துறை அலுவலக பணியாளர்களுக்கு இனி ‘எமிஸ்’ வழியே இடமாறுதல் வழங்க அந்தத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக பணியாளர்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கு கட்டாய இடமாறுதல் வழங்கப்படுகிறது.
அதேபோல், தகுதியுடையவர்களுக்கு விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. இந்த இடமாறுதல் நடவடிக்கைகள், ‘கூகுள் மீட்’ வழியே நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு கட்டாய் மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் மாவட்ட மாறுதல், பதவி உயர்வு போன்றவை, ஏமிஸ் இணையதளம் வழியே நடத்திட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட் டுள்ளது. ஆனால், ‘எமிஸ்’ (https://emis.tnschools.gov.in/auth/login) தளத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலக பணியாளர்களின் விபரங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால், வரும் 26ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் அனைவரும் தங்களின் விபரங்களை எமிஸ் (https://emis.tnschools.gov.in/auth/login) தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

Share this content:

You May Have Missed