பத்திரம் தொலைந்து போயிடுச்சு.. சர்வே நம்பர் மட்டுமே தெரியும்.. பத்திர நகலை வாங்க முடியுமா?

சென்னை: சிலர், தங்களது சொத்து பத்திரத்தை தொலைத்திருப்பார்கள்.. அப்படி சொத்து பத்திரத்தை தொலைத்தவர்களிடம் சர்வே நம்பர் மற்றும் பட்டா பதிவு செய்த ஆண்டு மட்டும் தெரிந்திருக்கும். ஆன்லைன் இசி அவர்களிடம் இருக்காது. அதேபோல் சிலரது தாத்தா, பாட்டி பெயரில் சொத்து இருக்கும். பத்திரம் தொலைந்திருக்கும். அவர்களால் பத்திர நகல் வாங்க முடியுமா என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சொத்து பத்திரம் தொலைந்தாலும் பத்திர நகலை உங்களால் நிச்சயம் வாங்க முடியும். சர்வே நம்பர் தெரிந்தாலே, உங்களால் ஆன்லைனில் ஈசிபோட்டு யார் பெயரில் பத்திரம் உள்ளது என்பதை அறியலாம். அது உங்கள் பெயரிலோ அல்லது உங்கள் பாட்டி, தாத்தா பெயரிலோ இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். பத்திரம் தொலைந்து போனால் பதற்றப்பட வேண்டாம். காவல் நிலையத்தில் சொத்து பத்திரம் தொலைந்தது தொடர்பாக நீங்கள் முறைப்படி புகார் அளிக்க வேண்டும். அந்த புகார் எப்படி இருக்க வேண்டும் என்றால், மிகச்சரியான தகவல்களுடன் இருக்க வேண்டும். அதன்பின்னர் நீங்கள் புகார் அளித்ததை விசாரிக்கும் காவல் துறை அதிகாரிகள், புகார் மனுவுக்கான எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) நகலை உங்களுக்கு அளிப்பார்கள். அந்த முதல் தகவல் அறிக்கை நகலை தமிழ்நாட்டில் உள்ள முன்னணி நாளிதழ் ஒன்றில் பத்திரம் காணவில்லை என்ற அறிவிப்பு கொடுக்க வேணடும். பின்னர் 60 நாட்கள் கழித்து காவல்நிலையம் சென்று பத்திரம் குறித்து முறையிட வேண்டும். காவல்துறை அதிகாரிகள் நாளிதழ் விளம்பரம் வெளியிட்டதில் இருந்து 60 நாட்கள் கழித்து, பத்திரம் காணவில்லை தொடர்பாக “பத்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது தொலைந்தது உறுதி” போன்று ஓர் சான்று அளிப்பார்கள் அதை பெற வேண்டும்.

Share this content:

Previous post

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும்: தமிழக அரசு அறிக்கை

Next post

கோவை மாநகராட்சியின் 35வது வட்டம்: புதிய மழைநீர் வடிகால் பணியை ஆய்வு செய்த மாமன்ற உறுப்பினர் சம்பத்

Post Comment

You May Have Missed