தடுத்து நிறுத்த இயலாத ஹை – பெர்ஃபார்மென்ஸ் பயணம்:அதிக வளர்ச்சி வேகத்துடன் வருடாந்திர விற்பனையில் சாதனை படைத்திருக்கும் BMW Group India

BMW Group India, மீண்டும் ஒருமுறை வருடாந்திர கார் விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது. இந்நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் 18,001 கார்கள் விற்பனையுடன், ஆண்டுக்கு ஆண்டு (YoY) அடிப்படையில் 14% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில் BMW 17,271 யூனிட்களையும், MINI 730 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன. BMW Motorrad 5,841 மோட்டார்சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்திருக்கிறது.
BMW Group India – ன் தலைவரும் சிஇஓ-வுமான ஹர்தீப் சிங் பிரார் இது குறித்துக் கூறுகையில்
2025-ஆம் ஆண்டு BMW Group India – க்கு இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச விற்பனையுடன், பல சாதனைகளை முறியடித்த ஆண்டாக அமைந்துள்ளது.
கார் விற்பனையில் நாங்கள் 18,000 யூனிட்கள் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளோம்.
சொகுசு வாகனப் பிரிவின் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட, நாங்கள் 14% என்ற மிக வலுவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது, மதிப்புமிக்க எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் பிராண்டுகள் மீது கொண்டுள்ள அதிக விருப்பத்தையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
இன்டெர்னல் கம்பூஸன் இன்ஜின்ஸ் அல்லது எலக்ட்ரிக் வெஹிக்கிள்கள், எஸ்ஏவிகள் அல்லது செடான் அல்லது லாங் வீல்பேஸ் மாடல்கள் விற்பனை வளர்ச்சியடைந்து வருகிறது. லக்ஸரி எலக்ட்ரிக் செக்மென்ட் வாகனப் பிரிவில் எங்களது தலைமைத்துவம், நிலைப்புத்தன்மையுள்ள போக்குவரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, இந்தியாவில் லக்ஸரி கார் மார்க்கெட்டின் அளவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. இனி வரும் காலங்களிலும், எங்களை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டும் அம்சங்களான – ஷீர் டிரைவிங் பிளஷர், நிகரற்ற வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் வாடிக்கையாளர்களுடனான ஒவ்வொரு தொடர்பிலும் JOY வழங்கும் வலுவான டீலர் வலையமைப்பு ஆகியவற்றில் எங்களது கவனம் தொடர்ந்து இருக்கும் என்றார்..



Post Comment