Loading Now

கோவாவில் இருந்து மெரினா வந்த ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பல்கள்: பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வை

காற்றுமெத்தை உந்துசக்தி வாகனம் (ஹோவர்கிராப்ட்) என்பது நிலம், நீர், பனிப்பரப்பு மற்றும் சதுப்பு நிலம் என அனைத்துப் பரப்புகளிலும் காற்றின் உதவியுடன் மிதந்து செல்லக்கூடிய ஒரு வாகனமாகும். இது ‘காற்றுமெத்தை ஊர்தி’ அல்லது ‘மிதவையுந்து’ என்றும் அழைக்கப்படுகிறது.உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 ஹோவர்கிராப்ட்கள். சமீபத்தில் கோவாவில் நடந்த விழாவில் இந்திய கடலோரக் காவல் படைப் பணியில் சேர்க்கப்பட்டன. தொடர்ந்து, இதற்கான தாய் முகாமான மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்கு கோவாவில் இருந்து புறப்பட்டுச் சென்றன.அரபிக் கடல், இந்திய பெருங்கடல் வழியாக வங்காள விரிகுடா கடல் வழியாக ஹால்டியா நோக்கிச் சென்ற ஹோவர்கிராப்ட்கள் சென்னையில் மெரினா கடற்கரையில் தொழில்நுட்ப ரீதியான நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது.அதாவது பயணத்தின் ஒரு பகுதியாக ஓய்வுக்காக 2 ஹோவர்கிராப்ட் ரோந்து கப்பல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்துச் செல்கின்றனர். விரைவில் இது மீண்டும் தனது பயணத்தை ஹால்டியாவை நோக்கி தொடங்க உள்ளன.

Share this content:

Post Comment

You May Have Missed