வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 500 கிலோ மாம்பழங்களை கொண்டு மணல் சிற்பம்

பூரி: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. வரும் ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்டவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 500 கிலோ மாம்பழங்களைக் கொண்டு மணற் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ‘உங்கள் வாக்கு உங்கள் குரல்’ என்று எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், “தற்போது கோடைக்காலம் என்பதால், மக்கள் மாம்பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் மக்களைக் கவர, மாம்பழங்களைக் கொண்டு சிற்பம் உருவாக்கியுள்ளோம். இந்த சிற்பத்தை உருவாக்க 5 மணி நேரம் ஆனது. என் கல்வி நிறுவனத்தை சார்ந்த மாணவர்களின் உதவியோடு இந்த சிற்பம் உருவாக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

Share this content:

Previous post

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Next post

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புக்காக ஆந்திராவில் மாவட்டம்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரி நியமனம்

Post Comment

You May Have Missed