ரயிலில் கஞ்சா கடத்திய இருவர் பிடிபட்டனர்

அண்ணாநகர், நவ.24: ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக அண்ணாந கர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தக வல் வந்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு போலீசார் பெரம்பூர் ரயில் நிலையத்தில் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது போது, பார்ச லுடன் வந்த இருவரை மடக்கி பிடித்தனர். பின் னர். அந்த பார்சலைசோதனை செய்த போது கஞ்சா இருந்தது. விசார ணையில், பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி பிரகாஷ் (28), ஒடிசாவில் இருந்து 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது.இதேபோல், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரவ ணன் (28), ஆந்திராவில் இருந்து 4 கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய் தனர்.* முகப்பேர் பகுதியில் கஞ்சா விற்ற அண்ணாந கர் அன்னை சத்யா நகரை சேர்ந்த பிரபல ரவுடி சங் கர் (44), லதா (40), அய்ய னார் (25). வெற்றி (20). சூர்யா (23) ஆகியோரை போலீசார் கைது செய்த னர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக் கம், சூளைமேடு, திருமங்க லம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

Share this content:

Post Comment

You May Have Missed