Loading Now
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”

336645-150x150 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்"

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில்

பிடிஓ ரவிச்சந்திரன் உணவளித்து தொடக்கம்**

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவளிக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கடமலைக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் அவர்கள் நேரில் கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு சத்தான காலை உணவை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பசியின்றி பள்ளிக்கு வரவேண்டும், வறுமையின் காரணமாக கல்வி தடைப்பட்டுவிடக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையுடன் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் இலவச மதிய உணவுத் திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய வரலாற்றிலேயே புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய அந்தத் திட்டம், லட்சக்கணக்கான கிராமப்புற குழந்தைகளின் பள்ளி வருகையை உயர்த்தியதோடு, நாட்டின் எழுத்தறிவு விகிதத்தையும் கணிசமாக உயர்த்தியது.

அந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தின் தொடர்ச்சியாகவும், அதன் அடுத்த கட்ட பரிணாமமாகவும் தற்போதைய தமிழக முதலமைச்சரால் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை யும் கற்றல் திறனையும் மேம்படுத்துவதில் பெரும் பங்களிப்பு வருகிறது.

காலை நேரத்தில் அவசர அவசரமாக பள்ளிக்கு வரும் குழந்தைகள் பலர் உணவு அருந்தாமல் வருவதும், அதனால் வகுப்பறையில் கவனக் குறைவு மற்றும் சோர்வு ஏற்படுவதையும் உணர்ந்து இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காமராஜரின் வழியில் ஏழை மாணவர்களின் கல்விநிலையை முதன்மையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டம், இன்று கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

உணவை பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியோடு உண்டு கொண்டதுடன், அரசின் இந்த உயரிய முயற்சிக்கு தங்களது நன்றியினையும் தெரிவித்து கொண்டனர்.

Share this content:

Previous post

தென்பெண்ணையாற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற மாணவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

Next post

நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை… சிரித்துக்கொண்டிருந்த ஒப்பந்ததாரரை கடுமையாக எச்சரித்த அதிகாரி…

You May Have Missed