மலைபகுதியில் ஆய்வு செய்த சேலம் மாவட்ட ஆட்சியர்

வாழப்பாடி அருகே “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்” கீழ் மலை கிராமங்களில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்,பொதுமக்களிடையை கோரிக்கை மனுக்களை பெற்றார்.தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்” கீழ் கண்கட்டிஆலா, ஆலடிபட்டி, பெரிய வேலம்பட்டி, சின்னவேலம்பட்டி,சிறுமலை, அருநூத்துமலை போன்ற மலை கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.திருமதி.பிருந்தா தேவி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆலடிப்பட்டி பகுதியில் ஆய்வு செய்தபோது பட்டா, பட்டா மாறுதல், சாலை வசதி, போன்ற கோரிக்கை மனுக்களை பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை கொண்டார். அதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை சார்ந்த பல பண்ணையை ஆய்வு செய்தபோது மாமர செடி, கொய்யா போன்ற பழவகை செடிகளின் வகைகளை கேட்டறிந்தார். அருகில் இருந்த அருநூத்துமலை நீர்வழி பாதை ஓடையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார், அதனைத் தொடர்ந்து தாழ்வான பகுதி என்பதால் செக் சேம்பர் கட்ட ஊர் பொதுமக்கள் சார்பாக ஆவடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார்.அதனையடுத்து அருநூத்துமலை பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில் 272 பள்ளி மாணவர்கள் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர் இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியிடம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி நேரங்களில் பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்து தரக்கோரி பள்ளி சார்பில் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.இந்த ஆய்வில் சேலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, வாழப்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம், ஆலடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.அதனைதொடர்ந்து வாழப்பாடி பஸ்நிலையம், உழவர் சந்தை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின், ஆய்வின் போது பெறப்பட்ட மக்கள் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Share this content:

Post Comment

You May Have Missed