Loading Now

பெண்களிடம் முறைகேடு : தவெக எம்.எல்.ஏ அதிரடி நடவடிக்கை… தனியார் பேருந்து ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக பேருந்து ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து தவெக எம்.எல்.ஏ செல்வம் உத்தரவிட்டார்.விருதுநகர் வழித்தடத்தில் தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பேருந்து ஊழியர்கள் விருதுநகருக்கு செல்லாது என்று பெண்களிடம் முறைகேடாக நடந்துக் கொண்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தவெக எம்.எல்.ஏ செல்வம் பேருந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய எம்.பி. செல்வம் அவர்களை மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்வதாக கூறினார். பின்னர், பேருந்து ஊழியர்கள் குடும்பம் உள்ளதாகவும், இதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறியதால் இரக்கப்பட்டு ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காகவே பேருந்து ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ததாகவும் தெரிவித்தார்.

Share this content:

Post Comment

You May Have Missed