Loading Now

பாடல் பதிப்புரிமை உத்தரவை மீறியதாக மனு: இளையராஜா பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: பதிப்​புரிமை உத்​தரவை மீறியதற்​காக இசையமைப்​பாளர் இளையராஜா மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக்​ கோரி சரி​கமா நிறு​வனம் தாக்​கல் செய்த மனு மீது பதிலளிக்க இளை​ய​ராஜாவுக்கு டெல்லி உயர் நீதி​மன்​றம் நோட்​டீஸ் பிறப்​பித்து உத்​தர​விட்​டுள்​ளது.

டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் சரி​கமா நிறு​வனம் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: இசையமைப்​பாளர் இளை​ய​ராஜாவுக்கு எதி​ராக தொடுத்த பதிப்​புரிமை வழக்கை விசா​ரித்த டெல்லி உயர் நீதி​மன்​றம், சரி​கமா உரிமை கோரும் பதிப்​புரிமை பெற்ற பாடல்​களுக்கு இளை​ய​ராஜா உரிமை கொண்​டாட​வோ, பயன்​படுத்​தவோ அல்​லது பிறர் பயன்​படுத்த உரிமம் வழங்​கவோ, மூன்​றாம் நபரிட​மும் உரிமை கோரவோ கூடாது என இடைக்​கால தடை விதித்து கடந்த பிப்​ர​வரியில் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், ஸ்பாட்​டிஃபை மற்​றும் யூடியூப் போன்ற தளங்​களில் சரி​கமா வசம் உரிமம் உள்ள பாடல்​களை பயன்​படுத்​திய நிலை​யில், அப்​பாடல்​களின் உரிமை​யைத் தமக்​குரியது என்று அந்​நிறு​வனங்​களிடம் இளை​ய​ராஜா உரிமை கோரி​யுள்​ளார், இதன் மூலம் அவர் நீதி​மன்ற உத்​தரவை மீறி​யுள்​ளார்.

மேலும், ‘முரட்​டுக் காளை’ படத்​தில் இடம்​பெற்ற ‘பொது​வாக என் மனசு தங்​கம்’ என்ற பாடலின் உரிமை​யைத் தமக்​குரியது என்று கூறி, ‘பி​யாண்ட் பிக்​சர்​ஸ்’ நிறு​வனத்​திற்கு எதி​ராக இளை​ய​ராஜா ஜூன் 23-ம் தேதி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்த நிலை​யில், அதில் டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கு மற்​றும் அமலில் உள்ள தடை உத்​தரவு குறித்த தகவலை மறைத்து பாடலை பயன்​படுத்த இடைக்​காலத் தடை உத்​தரவு பெற்​றார். பின்​னர் அந்த பாடலின் உரிமம் மற்​றும் டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் உள்ள வழக்கு தொடர்​பாக உரிய விளக்​கம் அளிக்​கப்​பட்​ட​தால் அந்த பாடலுக்​கான தடை உத்​தரவு நீக்​கப்​பட்​டது.

இளை​ய​ராஜா​வின் நடவடிக்​கைகள் டெல்லி உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ரானதோடு, நீதி​மன்​றத்தை அவம​திக்​கும் செயலும் ஆகும். இளை​ய​ராஜாமீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக் வேண்​டும்.

இந்த உத்​தரவு மீறலுக்​காக இளை​ய​ராஜாவை சிறை​யில் அடைப்​பதோடு, அவரது சொத்துக்களைப் பறி​முதல் செய்து, அவற்றை விற்​று, அதன் மூலம் கிடைக்​கும் தொகையை சரிகமா நிறு​வனத்​திடம் ஒப்படைக்க வேண்​டும்.இவ்​வாறு அந்த மனு​வில் கோரப்​பட்​டுள்​ளது. இந்த மனு டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி அனுப் ஜெய​ராம் பம்​பானி முன்பு வி​சா​ரணைக்கு வந்​த​ போது, மனுவை பரிசீலித்த நீதிப​தி, இது தொடர்​பாக இளை​ய​ராஜா பதிலளிக்​க நோட்​டீஸ்​ பிறப்​பித்​து உத்​தரவிட்​டார்​.

Share this content:

You May Have Missed