திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியின் பத்தாவது மாநில பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நவம்பர். 25திருப்பூரில் நடைபெற்ற எஸ் டி பி ஐ கட்சியின் பத்தாவது மாநில பொதுக்குழு கூட்டம். புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு 23.24. ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இப் பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டு அறிக்கை நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்று ஆண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொது குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியவன நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் எஸ் டி பி ஐகட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் பைஸி, இலியாஸ் தும்பே அகில இந்திய செயலாளர்கள் ரியாஸ் பரங்கிபேட், அப்துல் சத்தார், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள்தெகலான்பாகவி,யாமுகைதீன் முகமது பாரூக், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.எஸ் டி பி ஐ கட்சியின் புதிய தமிழ் மாநில தலைவராக நெல்லை முபாரக், துணை தலைவராக அப்துல் ஹமீது, அசா உமர், பொதுச்செயலாளர்களாக நிஜாம்முகைதீன், மேலும் மாநில செயற்குழு உறுப்பினர்களாக அப்துல் ஹக்கீம், அமீர் ஹம்சா, நிர்வாகிகள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நீட் தேர்வு நிரந்தர விலக்கு விவகாரத்தில் தாமதமற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநில கல்விக் கொள்கையை விரைவாக நடை முறைப்படுத்த பட வேண்டும். சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். திருப்பூர் பின்னலாடை தொழிலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிய மாநில அரசுகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். போன்ற 24 பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ் டி பி ஐ கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாட்டை கோவை மண்டல எஸ் டி பி ஐ கட்சியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Share this content:
Post Comment