தலைமை செயலர் உத்தரவு! 2022 பேட்ச் தமிழ்நாடு கேடர்.. 10 அதிகாரிகள் உதவி & சார் ஆட்சியர்களாக நியமனம்!

சென்னை: ஐஏஎஸ் பயிற்சி நிறைவு பெற்ற 10 சிவில் சர்வீஸ் அதிகாரிகளை உதவி மற்றும் சார் ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2022 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பயிற்சி நிறைவு பெற்ற 10 ஐஏஎஸ் அதிகாரிகளில் 5 பேரை உதவி மாவட்ட ஆட்சியர்களாகவும், 5 பேரை சார் ஆட்சியர்களாகவும் நியமனம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார். குளித்தலை, தேவகோட்டை, திருக்கோவிலூர், ஸ்ரீபெரும்புதூர், கோபிசெட்டிபாளையம், கும்பகோணம், குன்னூர், பழனிக்கு துணை ஆட்சியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்வாதிஸ்ரீ, குளித்தலை உதவி ஆட்சியராகவும், ஆயுஷ் வெங்கட் வத்ஸ், தேவகோட்டை உதவி ஆட்சியராகவும், சிவானந்தம் ஈரோடு மாவட்டம் கோபி சார் ஆட்சியராகவும், ஆனந்த் குமார் சிங், திருக்கோவிலூர் உதவி ஆட்சியராகவும், ஆஷிக் அலி ஸ்ரீபெரும்புதூர் உதவி ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, ஹ்ருத்யா விஜயன் கும்பகோணம் சார் ஆட்சியராகவும், சங்கீதா குன்னூர் சார் ஆட்சியராகவும், கிஷன் குமார் பழனி சார் ஆட்சியராகவும், வினய் குமார் மீனா பத்மநாபபுரம் உதவி ஆட்சியராகவும், ரஜத் பீடோன் பெரியகுளம் சார் ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Share this content:

Previous post

ஐபிஎஸ் பயிற்சியில் முதலிடம் பிடித்தவர் தூத்துக்குடிக்கு புதிய ஏஎஸ்பி-யாக நியமனம்

Next post

சீக்கியர்கள் பற்றிய கருத்து: ராகுல் மீது வழக்கு தொடர்வேன் என பாஜக செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை

Post Comment

You May Have Missed