“ஜெயிலர் 2” வெற்றி: ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெல்சன், அனிருத்
‘ஜெயிலர் 2’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் வாழ்த்து பெற்றனர்.
‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி உள்ள இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மிர்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாபர் சாதிக் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.
எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ஜாக்கி ஷெராப், வித்யா பாலன், விஜய் சேதுபதி, அபேக்ஷா போர்வால், மிதுன் சக்ரவர்த்தி, அன்னா ராஜன், ஹக்கிம் ஷா, பகவதி பெருமாள், மேகனா ராஜ், பூர்ணா மற்றும் ஜதின் சர்னா ஆகியோர் புதிய முகங்களாக இணைந்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். கலநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஜெயிலர் 2’ திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.



Post Comment