சென்னை | ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்

சென்னை: சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நியூ ஆவடி சாலையில் கடந்த 15-ம் தேதி இரவு சாலையோரம் இருந்த இளம்பெண் ஒருவர் மது போதையில் தனது 6 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தியபடி இருந்தார். இதுகுறித்து போலீஸுக்கு புகார் வந்தது.

இதையடுத்து, டி.பி.சத்திரம் உதவி ஆய்வாளர்கலைச் செல்வி, உடனடியாக சென்று தகராறில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சு கொடுத்தவாறு, குழந்தையை மீட்க முயன்றார். இதில் கோபமடைந்த பெண், உதவி ஆய்வாளரை தாக்கினார்.

பின்னர் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சீதா (25) என்பதும், நேபாளத்தை சேர்ந்த அவர், அயனாவரம் கேவிஎன்புரத்தில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

தாக்குதலுக்கு உள்ளான உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, கடந்த 13-ம் தேதி ரோகித் ராஜ் என்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this content:

Post Comment

You May Have Missed