சிறுபான்மை துறை திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவராக .A.மஸ்தான் நியமனம்
திருப்பூர்,நவ.24-அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீனகார்கே, மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களின் வழிகாட்டுதலின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தேசிய தலைவர் இம்ரான் பிரதாப்கரி MP.,அகில இந்திய தேசிய ஒருங்கிணைப்பாளரும் சிறுபான்மை துறை தமிழக பொறுப்பாளருமான நஜ்முல் இஸ்லாம் அஹ்மர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில தலைவர் முகமது ஆரிப் ஆகியோர் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாவட்ட தலைவராக .A.மஸ்தான் அவர்களை நியமனம் செய்துள்ளனர்.புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள .A.மஸ்தான் அவர்களை நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Share this content:
Post Comment