Loading Now

என்னை கொன்றாலும் சரி..டிசம்பரில் வங்காள தேசம் செல்வது உறுதி: – ஷேக் ஹசீனா

வரும் டிசம்பர் மாதம் தாய்நாடான வங்காள தேசத்திற்கு நிச்சயம் திரும்புவேன்,’ என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு வங்காளதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. எனினும், இந்தியா இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில், வாஷிங்டனில் ‘அமெரிக்கா-வங்கதேச உறவுகள் மையம்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக ஷேக் ஹசீனா கலந்துகொண்டு உரையாற்றினார்.
வரும் டிசம்பர் மாதம் வங்காள தேசத்திற்கு திரும்ப உள்ளேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. எதனைக்கண்டும் நான் அஞ்சப் போவதில்லை. அங்குள்ள அரசு என்னை கைது செய்யலாம், கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கலாம். என்னை கொலை செய்யக்கூட துணியலாம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ​ஆனாலும், தாய்நாட்டுக்குத் திரும்புவது எனது தலையாய கடமை. என் மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்ய நான் அங்கு சென்றே தீருவேன் இது உறுதி என தெரிவித்தார்.

Share this content:

Post Comment

You May Have Missed