Loading Now

உணவில் ஒரு கிராம் உப்பை குறைத்தால் இதயநோய் 10% குறையும்: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

சென்னை: ​சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் 32 பிரிவு​களி​லும் புறநோ​யாளி​கள் முன்​ப​திவு வசதி சேவை​களை வழங்​கும் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட நலம் ஏஐ செயலியை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் நேற்று தொடங்கி வைத்​தார்.

தொடர்ந்​து, ரூ.15.73 கோடியி​லான நவீன மைய சமையற்​கூடம், மின்​சார வாக​னங்​கள், நவீன ரத்த சுத்​தி​கரிப்பு மையம், கேத் லேப், சிடி ஸ்கேனர், மேம்​படுத்​தப்​பட்ட எண்​டோஸ்​கோபி பிரிவு, அறுவை சிகிச்​சைக்கு பிந்​தைய தீவிர கண்​காணிப்பு பிரிவு ஆகிய​வற்றை பயன்​பாட்​டுக்கு கொண்டு வந்​தார்.

மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் லோக​நாயகி, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ரான், மருத்​து​வ​மனை நிலைய அலு​வலர்​கள் அறவாழி, உமாப​தி, கல்​லூரி துணை முதல்​வர் ​வித்யா உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

அப்​போது, அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வர் விஜய்​யின் வெளி​நாட்டு பயணம் காரண​மாக தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டம் தொடங்​கும் தேதி மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த திட்​டம் மதுரை மாவட்​டம் உசிலம்​பட்​டி​யில் தொடங்க இருக்​கிறோம்.

அதி​காரப்​பூர்வ தேதி விரை​வில் அறிவிக்​கப்​படும். குழந்​தைகளுக்கு வழங்​கப்​படும் தங்க மோதிரம் 916 ஹால்​மார்க் முத்​திரை​யுடன் தரமாக இருக்​கும். பரு​வ​மழை தொடங்​கு​வ​தால் டெங்கு காய்ச்​சலால் பாதிக்​கப்​படு​பவர்​களின் எண்​ணிக்கை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது.

இதனை கருத்​தில் கொண்டு கூடு​தல் பணி​யாளர்​களை பணி​யமர்த்தி தொடர்ந்து கொசு ஒழிப்பு பணி​யில் ஈடு​பட்டு வரு​கிறோம். கொசுக்கடி​யில் இருந்து ​மக்​களை பாது​காக்க தென்​காசி மாவட்​டம் கடையநல்​லூரில் உடலில் தடவும் கொசு விரட்​டியை சோதனை முறை​யில் பயன்​படுத்த உள்​ளோம்.

உணவில் ஒரு கிராம் உப்பை குறைத்​தால் 10 சதவீத இதயநோய் மற்​றும் 15 சதவீத பக்​க​வாத நோய் குறை​யும். இதுதொடர்​பாக மக்​களிடம் தொடர்ந்து விழிப்​புணர்வு ஏற்​படுத்தி வரு​கிறோம். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Share this content:

You May Have Missed