அச்சன்புதூர் இந்தியன் நர்சரி பள்ளியில் வைத்து திருநெல்வேலி போகோரா நேச்சுரல் ஹீலிங் சென்டர் மற்றும் அச்சன்புதூர் நலம் அக்குபஞ்சர் சென்டர் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம்.
அச்சன்புதூரில் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் இந்தியன் நர்சரி பள்ளியில் வைத்து திருநெல்வேலி போகோரா நேச்சுரல் ஹீலிங் சென்டர் மற்றும் அச்சன்புதூர் நலம் அக்குபஞ்சர் சென்டர் இணைந்து இலவச இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் திமுக செங்கோட்டை ஒன்றிய துணை செயலாளர் வாசுதேவன், திமுக பேரூர் செயலாளர் வெள்ளத்துரை, கட்டாரிப்பாண்டியன்,
மனிதநேய மக்கள் கட்சியின் பேரூர் தலைவர் அகமது அலி ரஜாய், லயன்ஸ்கிளப் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
மருத்துவர்கள் ஆறுமுகசெல்வி MD (Acu), மற்றும் அருணாதேவி MD., (Acu) ஆகியோர் சிகிச்சை பற்றிய விபரங்களை எடுத்து கூறி சிகிச்சையளித்தனர்.
ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் லிங்கத்துரை அவர்கள் மருத்து முகாமிற்கான ஏறபாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
தமுமுக செயலாளர் முகைதீன் அப்துல் காதிர், திமுக அக்ரி வெங்கடேஷ், மமக துணை தலைவர் அப்துல் ரஹிம், துணை செயலாளர் அன்வர்சாதிக் அலி ஆரஞ்ச் பைனான்ஸ் முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


