Loading Now

J.M.J media வினால் நடாத்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

சமூகத்தின் மத்தியில் இன்று மிக வேகமாக ஊடுறுவி வரும் போதைப் பொருட்களை இல்லாமலாக்கி “போதைப் பொருளற்ற உலகை எதிர்கால சந்ததிகளுக்கு கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் ஜே.எம்.ஜே மீடியாவினால் விழிப்புணர்வு நிகழ்வு உலகின் பல பாகங்களிலும் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. ஜே.எம்.ஜே மீடியா நிறுவனத்தினால் ஒவ்வோரு மாதமும் சமூகத்திற்கு தேவையான ஒவ்வோரு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அதற்கமைய இந்தபெப்ரவரி மாதம் தமது உலக நாடுகளில் உள்ள அவ் அமைப்பின் குழவினருடன் இணைந்து திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது, நம் சமூகத்தின் மத்தியில் மிக வேகமாக ஊடுறுவி வரும் உயிர்க்கொள்ளியான போதைப் பொருள்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் போதைப் பொருள் பழக்கத்தை முற்றாக மனிதர்களிடம் இருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடனும் JMJ media நிறுவன பணிப்பாளர் ஜஸூரா ஜலீலின் வழிகாட்டலினூடாக எதிர்கால தலைவர்களான பாடசாலை மாணவர்கள், தனியார் வகுப்பு மாணவர்கள், பல்கலை கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து இவ் விழிப்புணர்வு நிகழ்வினை வெகுசிறப்பாக ஒழுங்குபடுத்தி நடாத்தி முடித்தனர்.இந்நிகழ்வில் J.M.J media இன் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள், பல பிரதேசங்களைச் சேர்ந்த வெவ்வேறு துறையில் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகளும் நடத்தப்பட்டிருந்ததோடு, ஊர்வலங்களும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் சிறப்பம்சமே வளர்ந்து வரும் நாளைய தலைமுறையான எம் இளைஞர்கள் உட்பட சிறுவர்களும் கலந்து சிறப்பித்தமையுமாகும். இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வை சிறப்புடன் வெற்றிகரமாக ஒழுங்கு செய்து முடித்த பெருமை அக்குழுவனர்களையே சாரும்.

Share this content:

Post Comment

You May Have Missed