தாய் பேச மறுத்ததால் காவல் நிலையம் சென்ற 8 வயது சிறுவன்!
நாமக்கல், செப். 27வீட்டில் சேட்டை செய்த சிறுவனிடம் தாய் பேச மறுத்ததால் காவல் நிலையத்திற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை: மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து டிரான்ஸ்பார்மர் மீது குதித்த இளைஞர் உயிரிழப்பு
சென்னை, செப். 27சென்னை பாடி, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவ். இவர் சம்பவத்தன்று மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து அருகில்…
கொள்ளை நடந்த பிறகு அதிகரிக்கும் மவுசு; ஒரே நாளில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்ற ரீல்ஸ் மதுமிதா
இன்றைய காலக்கட்டத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏராளம். அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்கள் வித்தியாசமான வீடியோக்களை…
சிங்கப்பூர் துறைமுகத்தில் கன்டெய்னருடன் கடலில் விழுந்த தமிழக வாலிபர்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வாலாஜாபேட்டை, செப். 27சிங்கப்பூர் துறைமுகத்தில் கன்டெய்னருடன் கடலில் விழுந்து படுகாயமடைந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…
மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்.
தேனி கடமலைக்குண்டு சங்கரநாராயணன்
கொடைக்கானல் மலைப்பகுதியில் கனிமவளங்கள் அழிப்பு
வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் பாறைகள் உடைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில்…
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் நாளை கைரேகைப் பதிவு சிறப்பு முகாம்
சென்னை, செப். 26தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் நாளை (26.09.2026) கைரேகைப் பதிவு (eKYC) சிறப்பு முகாம் நடைபெறும் என்று…
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: மனிதர்களைப் பிரிய மனமில்லாமல் 200 கி.மீ நீந்தி தீவிற்கு மீண்டும் திரும்பிய கடல் நாய்
சீனா, செப். 26சீனாவில் மனிதர்களின் அன்பிற்கு பழகிய கடல் நாய் ஒன்று, ஆழ்கடலில் விடப்பட்ட பிறகும் மனிதர்களைப் பிரிந்திருக்க முடியாமல்…
அமெரிக்க கடற்கரையில் அரிய வகை கடல் ஆமை முட்டையிட்டது: விஞ்ஞானிகள் வியப்பு!
வாஷிங்டன், செப். 26அரிய வகை ஆமை ஒன்று அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் முட்டையிட்டது. இது வரலாற்றிலே முதன்முறையாகும் என்பதால் விஞ்ஞானிகள்…
கோவில் கட்டும் பணியின் போது பூமியில் கிடைத்த சுவாமி சிலைகள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கிராமத்தில் உள்ல 500 ஆண்டு பழமையான அக்னீஸ்வரர் ஆலயம் சிதிலமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் அங்கு புதிய கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்ட போது, அங்கு பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த போது மண்ணில் இருந்து 5 சிலைகள் கிடைத்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கிராமத்தில் 500 ஆண்டு பழமையான அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக சிதிலமடைந்த கோவிலின் ஒரு பகுதியில் சுவாமி சிலைகளை வைத்து அப்பகுதியை சேர்ந்த பலராமன் என்பவர் பூஜை நடத்தி கோவிலை பராமரித்து வந்தார். இந்த நிலையில், அப்பகுதி் மக்கள் அங்கு புதிதாக அக்னீஸ்வரர் கோவிலை கட்டும் பணியை துவங்கினர். அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டிய போது, அங்கு வித்தியாசமாக சத்தம் வருவதை கண்ட கோவிலை பராமரிக்கும் பரந்தாமன் என்பவரின் மகன் திரு அந்த இடத்தில் பார்த்த போது, அங்கு 5சிலைகள் இருப்பதை கண்டு அதிர்ந்தார். தொடர்ந்து இந்த தகவல் அப்பகுதியில் பரவி பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இந்த நிலையில் திரு சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் அபிராஜிற்கு தகவல் தந்தார். தொடர்ந்து வட்டாட்சியர் பாலாஜி உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியசெல்வி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அபிராஜ் சம்பவ இடம் விரைந்து மண்ணில் கிடைத்த சிலைகளை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின் அங்கு சுவாமி சிலைகளை ஆய்வு செய்த வட்டாட்சியர் பாலாஜி சுவாமி சிலைகளுக்கு சீல் வைத்து, தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்விற்கு பிறகு சிலைகளின் விபரம் குறித்து முழுமையாக தெரியவரும் என்றார். இந்நிலையில் மேற்கண்ட சுவாமி சிலைகளில் இரண்டு அம்மன் சிலைகயாகவும், ஒன்று நடராஜர் சிலையாகவும் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. …