Loading Now

51வது பயனாளிக்கு இலவச வீடு வழங்கிய தொழிலதிபர் கிளமெண்ட்

 
கும்மிடிப்பூண்டி,அக்.10. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பாரத் ஆக்சிஜன் நிறுவனரான ஜெ.கிளமெண்ட் சார்பில் 51வது பயனாளிக்கு இலவச வீடு வழங்கும்
 விழா புதுவாயலில் நடைபெற்றது.
 
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பாரத் ஆக்சிஜன் நிறுவனரான ஜெ.கிளமெண்ட் வீடற்ற ஏழை  எளியோர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருகிறார். இது வரை அவர் 50 பேருக்கு இலவசமாக
வீடு கட்டி தந்த நிலையில், அவர் குடியிருக்கு வீடில்லாமல் ஓரு அறை கொண்ட சிறிய குடிசையில்  புதுவாயலை சேர்ந்த காமாட்சி,பவானி, சித்ரா குடும்பத்தாருக்கு  1லட்சத்து 75ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி தந்தார்.
 
இந்நிலையில் பயனாளிக்கு வீட்டினை ஒப்படைக்கும் விழா தொழிலதிபர் கிளமெண்ட், சிந்து கிளமெண்ட் தலைமையில் நிடைபெற்றது. நிகழ்வில் அம்மா சோப்பு தொழிற்சாலை நிறுவனர் அம்மா தங்கப்பன், தொழிலதிபர் கும்பலங்காடு முனிகிருஷ்ணன், சஜீவ் வர்கீஸ், சேகர்ரெட்டி, அரிமா சங்க நிர்வாகிகள் செல்வம், ஜோசப் , கைரளி யோகா மைய நிறுவனர் ராதாகிருஷ்ணன், பாரத் ஆக்சிஜன் நிறுவன அதிகாரி பெபின் கிளமெண்ட் முன்னிலை வகித்தனர்.
 
தொடர்ந்து பயனாளியின் குடும்பத்தினருக்கு வீட்டினை  தொழிலதிபர்
ஜெ.கிளமெண்ட் ஒப்படைத்த நிலையில், நிகழ்வில் பங்கேற்றவர்கள் சார்பில் மேற்கண்ட குடும்பத்தினருக்கு வீட்டு உபயோக பொருட்கள் உதவி தொகை வழங்கப்பட்டது.மேலும் அந்த குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவி சித்ராவிற்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உதவித் தொகை ஆகியவை
 வழங்கப்பட்டது. 

Share this content:

Post Comment

You May Have Missed