நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 104-வது நினைவு நாள்: புதுச்சேரியில் மலர் வணக்கம்!
கருவடிக்குப்பத்தில் உள்ள நினைவிடத்தில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா உள்ளிட்டோர் மரியாதை – நாடக சபா சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி
தமிழ் நாடக உலகின் முன்னோடியும், நாடகத்தந்தை என்று போற்றப்படுபவருமான தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 104-வது ஆண்டு நினைவு நாள் இன்று (நவம்பர் 13) அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, புதுச்சேரி நாடக சபா சார்பில் கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடத்தில் இன்று காலை மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் திரு. இரா. சிவா கலந்து கொண்டு, சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்ச்சங்க பொருளாளர் மு. பாலசுப்ரமணியம், துணைத் தலைவர் ப. திருநாவுக்கரசு, திமுக இலக்கிய அணித் தலைவர் எம்.எஸ். ராஜா, முன்னாள் சுங்கம் மற்றும் கலால் துறை துணை ஆணையர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், திமுக தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், கோ. தியாகராஜன், சி. சத்தியவேல் மற்றும் புதுச்சேரி நாடக சபா நிர்வாகிகள் கண்ணன், ராமமூர்த்தி, விஜி என்ற வீரம்மாள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சங்கரதாஸ் சுவாமிகளுக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.
தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Share this content:



Post Comment