Loading Now

வெளிமாநிலத்தில் இருந்து சுமார் 35 கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்தி வந்த 3 எதிரிகள் கைது

இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று (16.07.2025) ஆற்காடு கிராமிய வட்ட ஆய்வாளர் திரு.சாலமன் ராஜா அவர்கள் தலைமையிலான போலீசார் தலங்கை வாலாஜா இரயில் நிலையம் அருகே சந்தேக நபர்கள் மூன்று வெள்ளை நிற பைகளை சோதனை செய்தபோது சுமார் 35 கிலோ கஞ்சா கைப்பற்றி இதனை கடத்தி வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த எதிரிகள் 1.நாராயன் பெஹரா (வ/36) 2.மீது நாயக் (வ/33), 3.ஸ்ரீதரா நாயக்(வ/(17) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா  பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

இதில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த காவல் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Share this content:

Post Comment

You May Have Missed