முதல் பெண் வழக்கறிஞராக இஃப்தார் நிகழ்ச்சியை நடத்திய திருமதி. பெரோக்ஷா அன்சாரி

சென்னை, எழும்பூர்: முதல் பெண் வழக்கறிஞராக திருமதி. பெரோக்ஷா அன்சாரி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேர்த்தியாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக திரு. பிரபாகர் (துணை தலைவர், இந்திய வழக்குரைஞர் கழகம்) திரு. கார்த்திகேயன் (துணை தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்) திரு. மோகன கிருஷ்ணன் (தலைவர், சென்னை உயர் நீதிமன்ற சங்கம்) திருமதி. பிரிசில்லா பாண்டியன் திரு. வேல்முருகன் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்) திருமதி. ராஜேக்ஷ்வரி பிரியா (அனைத்து மக்கள் அரசியல் கட்சி) திரு. விஜய பாஸ்கர் திரு. அடங்கா அன்பு (இந்திய தேசிய காங்கிரஸ்) ஆகியோர் கலந்து கொண்டு திருமதி. பெரோக்ஷா அன்சாரி அவர்களின் சமூகப்பணி மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டைப் பாராட்டி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
Share this content:
Post Comment