Loading Now

முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா: சென்னை மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் இரத்ததான முகாம் மற்றும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இரத்ததான முகாம் மற்றும் ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை சென்னை மேற்கு மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் பா. ராஜு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இரத்ததான முகாமை சேப்பாக்கம் பகுதி செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி 9வது மண்டலக் குழு தலைவர் எஸ். மதன் மோகன் அவர்கள் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 114(அ) வட்ட செயலாளர் A. தமிம்அன்சாரி, சென்னை மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் G. ராஜ ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this content:

Previous post

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கூறி மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next post

எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) பட்டமளிப்பு விழா

Post Comment

You May Have Missed