மது குடிக்க தனிநபர் அதிகம் செலவிடும் மாநிலம் எது? லிஸ்ட்டில் தமிழ்நாடு உள்ளதா? வெளியான ஆய்வறிக்கை!

ஜூனியர் ரிப்போர்ட்டர் ரவிச்சந்திரன் 500சென்னை: நம் நாட்டில் எந்த மாநிலத்தில், தனிநபர் மது அருந்துவதற்கு அதிகம் செலவிடப்படுகிறது என்பது குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. பட்டியலில் முன்னிலையில் உள்ள மாநிலங்கள் எவையெல்லாம் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த பட்டியலில் எந்தெந்த மாநிலங்கள் உள்ளன? எந்த மாநிலத்தில் எவ்வளவு செலவு செய்யப்படுகிறது? என்ற விவரத்தை பார்க்கலாம். மது வீட்டிற்கு மட்டும் அல்ல.. நாட்டிற்கும் கேடு என்பது மட்டும் இன்றி உடல்நலத்திற்கும் பெரும் கேடு என்பது அனைவரும் அறிந்தததே. ஆனாலும் இந்தியாவில் நாள்தோறும் மதுவிற்பனை என்பது அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. குறைந்த அளவில் மது குடித்தாலும் சோஷியல் டிரிங்க் எனப்படும் அவ்வப்போது மது குடித்தாலும் அது உடல் நலத்திற்கு தீங்கானதுதான்.. இந்தியாவில் மது குடிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. மது விற்பனை மூலம் கணிசமான வருவாயை அரசுகள் ஈட்டுகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசே மதுவிற்பனையை ஏற்று நடத்தி வருகிறது. அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும் பங்கு டாஸ்மாக் மதுவிற்பனை மூலமே கிடைக்கிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இந்தியாவில் எந்த மாநிலத்தில் தனி நபர் ஒருவர் மது குடிப்பதற்கு அதிகம் செலவு செய்கிறார் என்பது தொடர்பாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய பொது நிதி மற்றும் கொள்கை என்ற அமைப்பு இந்த ஆய்வை நடத்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் எந்த மாநிலங்கள் முதன்மை இடத்தில் உள்ளன. தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பது பற்றி இங்கே பார்ப்போம்… அதேபோல தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் 2011-12 ஆம் நிதி ஆண்டு தரவுப்படி ஆண்டுக்கு சரசாரி தனி நபர் மது நுகர்வில் ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது. ஆந்திராவில் ரூ.620 செலவு செய்யப்படுகிறது. கேரளாவில் ரூ.486 மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 457 மற்றும் பஞ்சாபில் ரூ.453 மற்றும் தமிழ்நாடு ரூ.330 , ராஜஸ்தான் ரூ.308 என முன்னிலை வக்கின்றன. மதுவினால் அதிக வரி வருவாய் பெற்ற மாநிலமாக கோவா உள்ளது. கடைசி இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளது.

Share this content:

Previous post

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரை ‘கட்டுப்படுத்த’ பார்களுக்கு கோவை போலீஸ் புதிய அறிவுரை

Next post

“வகுப்பறை முழுவதும் ஒரே ரத்தம்”. பதறிப்போன மாணவிகள்.. மகளிர் கல்லூரியில் பகீர்.. வெளிவந்த உண்மை.!!!

Post Comment

You May Have Missed