பொங்கல் பரிசு ரூ.3000 உறுதியா? எப்போது முதல் ரேஷனில் வழங்கப்படும்? யாருக்கு வழங்கப்படும்?

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பண்டிகைக்கு முன்பே விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலமெங்கும் உள்ள ரேஷன் கடைகள் வழியே பரிசுப் பொருட்கள் சீராகச் சென்றடைய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். அமைச்சர் காந்தி அளித்த பேட்டியில், பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளன. ஜனவரி 10ஆம் தேதிக்குள் விநியோகப் பணிகளை முழுமையாக முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் குடும்பங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு முன்பே பரிசுகளைப் பெற்று, தடையின்றி பயன்படுத்த இயலும். பொங்கல் பரிசுத் திட்டம் பொது விநியோகத் திட்டத்தின்கீழ், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ரேஷன் கடைகள் வழியே இத்தொகுப்புகள் விநியோகிக்கப்படும். தாமதம் தவிர்க்கவும், தகுதியுள்ள எந்தக் குடும்பமும் விடுபடாதிருக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலுமுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவார்கள் என அரசு உறுதிப்படுத்தியுள்ளது. உரிய கண்காணிப்புடன், விநியோகப் பணிகள் ஒழுங்கான முறையில் நடைபெறும் எனவும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பத்தில் ரூ.5,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரூ. 3000 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Post Comment