

பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 25.07.2025 அன்று நடைபெற உள்ளது
பாப்பிரெட்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் வரும் 25.07.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மக்கள் சந்திப்பு திட்டமான “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமை முன்னிட்டு, பொதுமக்கள் அறிந்து பயனடையும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முகாம் பற்றிய தகவல்களும், தேதி மற்றும் இட விவரங்களும் பேனர்களில் வெளியிடப்பட்டுள்ளன.
மக்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொண்டு தங்கள் கோரிக்கைகள், புகார்கள் மற்றும் சந்தேகங்களை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
புகைப்படங்கள் இணைத்து பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
– செயல் அலுவலர்,
பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி
Post Comment