பழனி அருகே ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது, 2300 கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் (Civil Supplies CID) திண்டுக்கல் DSP செந்தில்இளந்திரையனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் சுகுணா தலைமையிலான குழு பழனி சத்திரப்பட்டி டோல்கேட்டில் தீவிர வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, ஒரு லாரி நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அதில் கேரளாவுக்கு 2300 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதானது தெரியவந்தது. போலீசார் மதுரை ஐயர்பங்களா பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (53) மற்றும் மதுரை மேலக்கல் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (31) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share this content:

Post Comment

You May Have Missed