நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் முதன்முறையாக அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, முதன்முறையாக பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் தைரியமூட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள் குறித்தும், விடைத்தாள் புத்தகத்தை பயன்படுத்துவது குறித்தும், உடல்நலம் பேணுதல், போதுமான ஓய்வு எடுத்தல் மற்றும் சிறப்பாக தேர்வு எழுதுதல் குறித்தும் எடுத்துக் கூறினார். தமிழ் ஆசிரியர்கள் வின்ஸ்டன் ஜோஸ்வா, அம்புரோஸ் சுகிர்தராஜ், கணித ஆசிரியரும் உதவி தலைமை ஆசிரியருமான சார்லஸ் திரவியம் மற்றும் ஆங்கில ஆசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார் ஆகியோர் மாணவர்கள் தேர்வு எழுதும் முறைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர். அரசு பொதுத்தேர்வு மாதிரி விடைத்தாள்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரிய,ஆசிரியைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர் எட்வின், கணித ஆசிரியர்கள் கிறிஸ்டோபர் லிவிங்ஸ்டன், நேசகுமார், ஜெயக்குமார் டேவிட் மற்றும் நிர்வாகப் பிரிவு ஆசிரியர் ஜெபநேசன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Share this content:
Post Comment