தென்காசியில் ஹஜ் பெருநாள் தொழுகை கொண்டாடப்பட்டது.
தென்காசி: தென்காசி ஜாக் ஜமாஅத் அமைப்பின் சார்பில் இன்று காலை 7 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை பழைய RTO ஆபிஸ் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகையை முன்னின்று நடத்தி, குத்பா (பேருரை) நிகழ்த்தியவர் அமைப்பின் தென்காசி மாவட்ட தலைவர் சுலைமான் ஃபிர்தௌஸி அவர்கள் ஆவார்.தொழுகை நிறைவடைந்ததும், பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு, இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்தினர்.நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்று, மக்கள் பக்திபூர்வமாக பெருநாளை கொண்டாடினர்.
Share this content:
Post Comment